செய்திகள்
முருகன்

கொரோனாவை விரட்ட கந்தசஷ்டி கவசம்: ‘வாட்ஸ்-அப்’ குழு அமைத்து பெண்கள் பாராயணம்

Published On 2020-04-27 07:01 GMT   |   Update On 2020-04-27 07:01 GMT
‘வாட்ஸ்-அப்’ மூலம் குழு அமைத்து கொரோனாவை விரட்டுவதற்காக கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யும் பெண்கள், ஒரு கோடி முறை நிறைவடைந்ததும் மலேசியா முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:

கொரோனா பீதியில் உலகம் நிறைந்து கிடக்கிறது. இதில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்ற ஏக்கமும், தவிப்பும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.

கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடிக்கிடந்தாலும் மக்கள் வீடுகளில் இருந்து பிரார்த்தனை செய்யவும் தவறவில்லை.

அமெரிக்கா வாழ் தமிழ் பெண்கள் ‘வாட்ஸ்-அப்’ மூலம் பெண்களை குழுவாக இணைத்துள்ளனர். இந்த குழுவினர் தங்கள் நண்பர்கள் உறவினர் என்று ஏராளமான பெண்களை இந்த குழுவில் இணைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான பெண்கள் இந்த குழுவில் இணைந்துள்ளனர்.

இந்த குழுவில் இடம் பெற்றுள்ள பெண்கள் தினமும் கொரோனாவை விரட்டுவதற்காக காலை, மாலை வேளைகளில் கந்த சஷ்டி கவசம் வீடுகளில் பாராயணம் செய்கிறார்கள்.

தினமும் ஒவ்வொருவரும் எத்தனை முறை பாராயணம் செய்தார்கள் என்பதை அந்த ‘வாட்ஸ்-அப்’ குழுவில் தெரிவித்து விடுகிறார்கள்.

இவ்வாறு ஒரு கோடி முறை நிறைவடைந்ததும் மலேசியா முருகன் கோவிலில் பிரார்த்தனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News