செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பு பணி அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- ஜக்கையன் எம்எல்ஏ

Published On 2020-04-24 12:59 GMT   |   Update On 2020-04-24 12:59 GMT
கொரோனா தடுப்பு பணி அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜக்கையன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
உத்தமபாளையம்:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உத்தரவின் பேரில் கம்பம் தொகுதியில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்க்ள் மற்றும அலுவலக பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு நிவாரண பொருட்களாக அரிசி, காய்கறிகள் அடங்கி தொகுப்புகளை ஜக்கையன் எம். எல்.ஏ.வழங்கினார்.

முதல் கட்டமாக உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகள் நாகைய கவுண்டன் பட்டி. கோகிலாபுரம், ராமசாமி நாயக்கன் பட்டி, உ.அம்மாபட்டி .மேலச் சிந்தலைச்சேரி, தே.மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 ஊராட்சிகளிலும் உத்தமபாளையம் , கோம்பை, பண்ணைப்புரம் தேவாரம், உள்ளிட்ட பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார். இன்று காலை சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் சீலையம்பட்டி வேப்பம்பட்டி, உள்ளிட்ட ஊராட்சிகளில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் ஜக்கையன் எம், எல்,ஏ கூறியதாவது:-

முதல் அமைச்சர் உத்தரவின் பேரில் எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக நிவாரண பொருட்களை வழங்கி வருகிறேன். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய .மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வராமல் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

நோய்த்தொற்று பரவாமல் இருக்க கைகளை நன்கு சோப்பால் கழுவ வேண்டும் ஒரு நாளைக்கு குறைந்தது 15 முறையாவது கைகளை கழுவ வேண்டும். சுகாதாரம் காக்கும் வகையில் தூய்மையாக இருந்து கொண்டால் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முடியும், எனவே பொதுமக்கள் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன், ஒன்றிய செயலாளர்கள் அழகுராஜா. கதிரேசன் மற்றும் பேரூராட்சி , ஊராட்சி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News