செய்திகள்
நிவாரண பொருட்கள்

திருச்சி நவல்பட்டு ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் விநியோகம்

Published On 2020-04-23 13:22 GMT   |   Update On 2020-04-23 13:22 GMT
திருச்சி நவல்பட்டு ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் வழங்கினர்.
திருச்சி:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வேலையின்றி வறுமையில் வாடும் மக்களுக்கு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவெறும்பூர் ஒன்றியம், நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு ஊராட்சி சார்பில் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, சர்க்கரை, காய் வகைகள் உள்ளிட்ட பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. இதனை நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் வழங்கினர்.

நவல்பட்டு ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டங்களாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News