செய்திகள்
பூண்டி எரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து குறைந்து உள்ளதை படத்தில் காணலாம்.

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2020-04-07 10:21 GMT   |   Update On 2020-04-07 10:21 GMT
கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது.

ஊத்துக்கோட்டை:

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் 28-ந் தேதியில் இருந்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதிகபட்சமாக வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்சமாக 810 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது.

இந்த நிலையில் கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. வினாடிக்கு வெறும் 40 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நீர் மட்டம் 27.93 அடியாக பதிவானது. 1306 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 260 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி இந்த ஆண்டு ஒரே தவனையில் 7. 500 டிஎம்சி தணணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.

Tags:    

Similar News