செய்திகள்
தனிமைப்படுத்துதல்

மதுரை-விருதுநகர்-ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 லட்சத்து 4 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

Published On 2020-04-04 12:04 GMT   |   Update On 2020-04-04 12:04 GMT
மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 லட்சத்து 4 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் கொரோனா நோயால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உறவினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களான 379 பேர் அடையாளம் காணப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் வசித்த மதுரை மேலமடை, நரிமேடு, தபால்-தந்தி நகர், மேலூர், எழுமலை, திருமங்கலம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் வசிக்கும் 67 ஆயிரத்து 748 குடும்பங்களில் 3 லட்சம் பேரை கண்காணிக்க 854 சுகாதார குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,877 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து 4 ஆயிரத்து 777 பேர் வந்துள்ளனர். இவர்களில் தற்போது வரை 2 ஆயிரத்து 468 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News