செய்திகள்
காய்கறி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்திய காட்சி

தஞ்சை மாநகரில் தற்காலிக காய்கறி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2020-04-02 12:02 GMT   |   Update On 2020-04-02 12:02 GMT
தஞ்சை மாநகரில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி கடைகளை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர்:

கொரோனா நோய் தொற்று பாதிப்பில் இருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் வசதி கருதியும், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் வாங்குவதற்கு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி தஞ்சை மாநகரில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தஞ்சை மாநகராட்சி தற்காலிக காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் செயல்படும் சில்லறை வியாபார காய்கறி கடைகள் 20 இடங்களில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 20 இடங்களில் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தஞ்சை கீழவாசல் தூய பேதுருஉயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளை மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News