செய்திகள்
கோப்பு படம்.

பொதுமக்களை லத்தியால் அடிக்காதீர்கள்- சென்னை போலீசாருக்கு உயர் அதிகாரி அறிவுரை

Published On 2020-03-28 12:10 GMT   |   Update On 2020-03-28 12:10 GMT
கொரோனா பரபுவதை தடுக்க ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வரும் பொதுமக்களை லத்தியால் அடிக்காதீர்கள் என்று சென்னை போலீசாருக்கு உயர் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை:

கொரோனா வைரஸ் பரபுவதை தடுக்க ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்காக சிலர் வெளியே சென்று வருகிறார்கள். இதில் சில இடங்களில் போலீசார் அத்துமீறி நடந்து பொதுமக்களை லத்தியால் அடித்ததாக புகார்களும் எழுந்துள்ளன. பல சம்பவங்கள் வீடியோகவும் வைரலாகி வருகிறது. இதையொட்டி பொதுமக்களை லத்தியால் அடிக்காதீர்கள் என்று போலீசாருக்கு சென்னை பூக்கடை போலீஸ் துணை கமி‌ஷனர் ராஜேந்திரன் ஆடியோ மூலம் அறிவுரை வழங்கி உள்ளார்.

அதில் அவர் கூறிய இருப்பதாவது:- வாகன சோதனையில் இருக்கின்ற ஆயுத படை ஏ.ஆர். போலீஸ், லோக்கல் போலீசார், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் யாராக இருந்தாலும் கையில் ‘லத்தி’ (கம்பு) வைத்திருக்க கூடாது. நம்முடைய நோக்கம் 144 தடை உத்தரவை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல வேண்டும்.

அதைவிட்டு விட்டு ரோட்டுக்கு வரும் பொதுமக்களை அதிகமாக திட்டுவதோ, அடிப்பதோ நல்லதல்ல. இது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கிடையாது.

எனவே இந்த தடை உத்தரவை மக்களுக்கு புரிய வையுங்கள். அங்கு நிற்கும் போலீசாரில் ஒருவரை பேச சொல்லுங்கள். தேவையில்லாமல் வெளியே வருவதால் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள்.

இது எப்படி உங்கள் குடும்பத்தினரை பாதிக்கும் என்பதை எடுத்து சொல்லுங்கள். இப்படி சொன்னாலே அவர்கள் புரிந்து கொள்வார்கள். உங்களுக்காகதான் நாங்கள் பணியில் இருக்கிறோம். எங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று சொல்லுங்கள். எக்காரணம் கொண்டும் நாம் நமது சமநிலையை இழந்து விடக்கூடாது. நாம் பொதுமக்களிடம் தேவையில்லாமல் சண்டை போட்டால் நமக்குதான் அவப்பெயர் ஏற்படும். எனவே அவை தவிருங்கள்.

எனவே உயர் அதிகாரியும் கீழே உள்ள போலீசாருக்கு தகுந்த அறிவுரை சொல்லுங்கள். பக்குவமாக சொல்லி சொல்லி பொதுமக்களை திருப்பி அனுப்புங்கள்.

அத்தியாவசிய பணிகள் எது? அத்தியாவசிய பணிகள் இல்லாதது எது? என்பதில் தெளிவாக இருங்கள். அதற்கேற்ப முடிவுகள் எடுங்கள். நாம் பொது அறிவை உபயோகப்படுத்தினாலே போதும் தேவையில்லாத சர்ச்சையில் சிக்க மாட்டோம். எனவே பொதுமக்களுக்கு அறிவுரையை கூறி புரிய வையுங்கள். யாரையும் தரக் குறைவாக பேசக் கூடாது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News