செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மனு வாங்குவது நிறுத்தம்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2020-03-20 11:37 GMT   |   Update On 2020-03-20 11:37 GMT
பொதுமக்கள் நலன் கருதி வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந் தேதி மற்றும் 30-ந் தேதி ஆகிய 2 தினங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனோ வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில் உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய் தொற்றாக அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு, நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு உத்தரவின்படி வருகிற 31-ந் தேதி வரை மூடி இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் 15 நாட்கள் தவிர்க்க வேண்டும் என்ற அறிவுரைகளை பின்பற்றுமாறு முதல்- அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரனோ வைரஸ் நோயை தடுப்பதற்கென அரசு வழங்கியுள்ள அறிவுரைகளை முழுமையாக மேற்கொண்டு மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

பொதுமக்கள் நலன் கருதி வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந் தேதி மற்றும் 30-ந் தேதி ஆகிய 2 தினங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News