செய்திகள்
முக கவசம்

திருச்சியில் முக கவசம் தட்டுப்பாடு

Published On 2020-03-20 03:13 GMT   |   Update On 2020-03-20 03:13 GMT
திருச்சியில் ஒரு முக கவசம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று தொழிலாளி தெரிவித்துள்ளார்.
திருச்சி:

வைரஸ் வராமல் தடுக்க வெளியில் செல்லும்போது முகத்தில் முக கவசம் (மாஸ்க்) அணிந்து கொள்ளவேண்டும், ஒருவருக்கொருவர் கை கொடுப்பதை தவிர்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வின் காரணமாக அவற்றை வாங்குவதற்கு மக்களிடம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப முக கவசங்கள் மருந்து கடைகளில் கிடைப்பது இல்லை. திருச்சியில் முக கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் திருச்சி காந்திமார்க்கெட் காந்தி சிலை அருகில் நேற்று காலை போஸ் இளைஞர் எழுச்சி கழகம் சார்பில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு இலவசமாக முக கவசங்கள் மற்றும் கைகழுவுவதற்கான சோப்புகள் வழங்கப்பட்டது. இதுகுறித்து தொழிலாளர் ஒருவர் கூறுகையில் ‘ஒரு முக கவசம் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே, அரசு இவற்றை இலவசமாக வழங்க வேண்டும்’ என்றார்.


Tags:    

Similar News