செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் எதிரொலி- திருச்சி மாவட்டத்தில் 1,782 பள்ளிகள் மூடல்

Published On 2020-03-16 11:37 GMT   |   Update On 2020-03-16 11:37 GMT
திருச்சி மாவட்டத்தில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 1,782 பள்ளி வகுப்புகள் இன்று முதல் மூடப்பட்டன.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் திருச்சி, லால்குடி, மணப்பாறை, முசிறி ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகள் உள்ளன.

இதில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 1,782 பள்ளி வகுப்புகள் இன்று முதல் மூடப்பட்டன. வருகிற மார்ச் 31-ந்தேதி வரை 5-ம் வகுப்பு வரை விடுப்பு அளிக்க மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இது குறித்த அறிவிப்பை தனியார் பள்ளிகள் செல்போன் குறுந்தகவல்கள் மூலம் நேற்றே மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்திவிட்டனர்.

பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளிகளுக்கு கண்டிப்பாக வர உத்தரவிடப்பட்டுள்ளது. 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளிகளில் இன்று முதல் சத்துணவு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News