செய்திகள்
கோப்பு படம்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ. 22 ஆயிரம் அபராதம் விதிப்பு

Published On 2020-03-13 10:42 GMT   |   Update On 2020-03-13 10:42 GMT
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் சோதனை செய்த அதிகாரிகள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததுடன் ரூ. 22ஆயிரம் அபராதம் விதித்தனர்.
முள்ளக்காடு:

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி செயலாளர் ருக்மணி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானு, ஹெலன்பொன்மணி, வெங்கடாசலம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளின் செயலர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஊராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்ததை பார்த்து அதனை பறிமுதல் செய்ததுடன் ரூ. 22ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News