செய்திகள்
கைது

தஞ்சை அருகே விபத்தில் சிக்கிய காரை எடுத்து செல்வதில் தகராறு: அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

Published On 2020-03-11 11:26 GMT   |   Update On 2020-03-11 11:26 GMT
தஞ்சை அருகே விபத்தில் சிக்கிய காரை எடுத்து செல்வதில் ஏற்பட்ட தகராறில் இருவரை தாக்கிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள வளம்பக்குடி பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிளிலும் காரும் மோதி கொண்ட விபத்தில் கார் பழுதாகி நின்றது. இதனால் காரை இழுத்து செல்வதற்காக புது கரியப்பட்டியை சேர்ந்த மருதராஜ் (வயது 32), அதே ஊரை சேர்ந்த கார்த்திக் (30) இருவரும் செங்கிப்பட்டிக்கு சென்று அங்கு லோடு ஆட்டோவை வாடகைக்கு பேசி வளம்பக்குடிக்கு அழைத்து வந்தனர்.

லோடு ஆட்டோவை செங்கிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதிஷ்(26) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

வளம்பக்குடியில்பழுதாகி நின்றிருந்த காரை இழுத்து செல்வதற்காக லோடு ஆட்டோவுடன் கம்பிகட்டி இணைத்துள்ளனர். அப்போது சதீஷ் திடீரென வேறு லோடு ஆட்டோவை வாடகைக்கு பிடித்து கொள்ளுங்கள் என மருதையன், கார்த்திக் இருவரிடமும்கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

உடனே சதீஷ் அவருடைய அண்ணன் செங்கிப்பட்டியை சேர்ந்த லெனின்(32), அவருடைய நண்பர் பூபதி (23) ஆகிய இருவரையும் போனில் பேசி சம்பவ இடத்திற்கு வருமாறுஅழைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அங்கு வந்துள்ளனர். பின்னர் லெனின், பூபதி, சதிஷ் ஆகிய மூவரும் சேர்ந்து கொண்டு மருதராஜ், கார்த்திக் இருவரையும் கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மருதராஜ், கார்த்திக் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சதிஷ், லெனின், பூபதி ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News