search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணன் தம்பி கைது"

    • நானும், எனது உறவினர் முத்துராஜ் என்பவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்தோம்.
    • ஆவின் நிறுவனத்தில் சேருவதற்கான வேலை நியமன ஆணையை அனுப்பி வைத்தனர். அதை எடுத்துக்கொண்டு ஆவின் நிறுவனத்திற்கு சென்றபோது நியமன ஆணை போலி என தெரியவந்தது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் முள்ளிபள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 25). இவர் மதுரை நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நானும், எனது உறவினர் முத்துராஜ் என்பவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்தோம். அப்போது எங்களது உறவினர் அனந்த கிருஷ்ணன், ஹரிகிருஷ்ணன், திருமங்கலத்தை சேர்ந்த வைரவ ஜெயபாண்டி ஆகியோர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் கொடுக்க வேண்டுமென ஆசைவார்த்தை கூறினர்.

    இதனை நம்பி பணம் கொடுக்க சம்மதித்தோம். அதன்படி சென்னைக்கு சென்ற நானும், முத்துராஜூம் அங்கு ஆவினில் பணிபுரியும் மணிபாரதி என்பவரை சந்தித்தோம்.

    அப்போது அவர் வேலைக்காக ரூ. 12 லட்சம் கொடுக்க வேண்டுமென தெரிவித்தார். அவர் கூறியபடி, மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு வைரவ ஜெயபாண்டியிடம் முதற்கட்டமாக ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தோம். அதன்பின் அவர்கள் எங்கள் 2 பேருக்கு ஆவினில் அரசு வேலைக்கான நியமன கடிதத்தை கொடுத்தனர்.

    சிறிது நாட்களில் திடீரென்று வேலைக்கான நியமனம் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள பணத்தை செலுத்தினால் வேலை கிடைக்கும் என கூறினர். இதையடுத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பல்வேறு தவணைகளில் செலுத்தினோம்.

    அதன்பின் அவர்கள் ஆவின் நிறுவனத்தில் சேருவதற்கான வேலை நியமன ஆணையை அனுப்பி வைத்தனர். அதை எடுத்துக்கொண்டு ஆவின் நிறுவனத்திற்கு சென்றபோது நியமன ஆணை போலி என தெரியவந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ. 12 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார். அதன்படி வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெகநாதன் ஆலோசனையின்பேரில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் மோசடி செய்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அனந்தகிருஷ்ணன், அவரது தம்பி ஹரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்பு டைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×