செய்திகள்
கோப்பு படம்

கமுதியில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த 2 பேர் கைது

Published On 2020-03-09 08:31 GMT   |   Update On 2020-03-09 08:31 GMT
கமுதியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் அறிமுகப்படுத்திய பிரத்யேக மொபைல் எண்.948991 9722-ல் பல்வேறு தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கடந்த 6-ந் தேதி தகவலாளர் கொடுத்த ரகசிய தகவலின்படி காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், கமுதி ஆய்வாளர் கஜேந்திரன், சார்பு ஆய்வாளர் முருகநாதன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கமுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் செல்போன் கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

கமுதி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்த போது, கடை உரிமையாளர் கமுதி சுப்பையாத் தேவர் காம்பவுண்டில் வசிக்கும் காளிமுத்து மகன் பொன்னிருள் மற்றும் அந்த கடையில் வேலை பார்த்து வரும் மேலராமநதியை சேர்ந்த மாரியப்பன் மகன் வழிவிட்டாகிழவன் என்பவரும் கணினியில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்ததும் அதை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.50-க்கு பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளில் பதிவேற்றம் செய்து கொடுத்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக கமுதி காவல் நிலையத்தில் போஸ்கோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் இவர்களை போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் குறித்து உடனடியாக எனது பிரத்யேக கைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்தார்.
Tags:    

Similar News