செய்திகள்
முக ஸ்டாலின்

சர்வதேச மகளிர் தினம் - முக ஸ்டாலின் வாழ்த்து

Published On 2020-03-08 07:19 GMT   |   Update On 2020-03-08 07:19 GMT
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

பெண்களைப் போற்றுதலில் இல்லை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம். இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு என்று அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்! பெண்ணே வாழ்க என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News