செய்திகள்
மழை

திருச்சியில் திடீர் மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2020-03-07 10:54 GMT   |   Update On 2020-03-07 10:54 GMT
திருச்சியில் திடீர் மழையால் மாநகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

திருச்சி:

திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். உடல் சூட்டை தணிக்க பழங்கள், குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர்.

இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் இளநீர் , தர்ப்பூசணி குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயிலின் தாக்கம் காணப்படுவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுகின்றனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை 5-30 மணியில் இருந்து 6-15 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மாநகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News