செய்திகள்
முதல்வர் பழனிசாமி.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 15-ந் தேதி திண்டுக்கல் வருகை

Published On 2020-03-05 17:21 GMT   |   Update On 2020-03-05 17:21 GMT
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல் வருகை தர உள்ளதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்:

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், கரூர் உள்பட 11 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒடுக்கம் பகுதியில் மருத்துவகல்லூரி அமைய உள்ளது. இதற்காக மாநகராட்சி வசம் இருந்த 22 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் டி.எஸ்.பி.க்கள் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும் வழியில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, தேவைப்படும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

திண்டுக்கல்லில் இருந்து ஒடுக்கம் செல்வதற்கு 2 பாதைகள் உள்ள நிலையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வருகைக்கு எந்த பாதையை தேர்வு செய்வது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News