செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

கமுதியில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் பரிதவிப்பு

Published On 2020-03-03 08:23 GMT   |   Update On 2020-03-03 08:23 GMT
கமுதி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

கமுதி:

கமுதியில் வருவாய் அலுவலகம், யூனியன் அலுவலகம் , பத்திரப்பதிவு கருவூலம், பேரூராட்சி, காவல்துறை, கல்லூரி, பள்ளிகள், வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இதன் ஆதாரமாக விளங்கும் மின்சாரம் அடிக்கடி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை தடைபடுவதால் அனைத்துப் பணிகளும் நடைபெறாமல் போய் விடுகிறது.

இதனால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற முடியாமலும், யூனியன் அலுவலகத்திலும் பணிகள் முடங்கி போவதாலும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய முடியாமலும், தொழிற் சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டு பரிதவிக்கின்றனர்.

கமுதி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்படுவதால் மின்தடை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் சார்பில் முதல்-அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News