செய்திகள்
காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

திருப்பத்தூரில் வியாபாரிகள் விடிய விடிய போராட்டம்

Published On 2020-02-26 12:23 GMT   |   Update On 2020-02-26 12:23 GMT
திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் சக்தி நகரில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 139 கடைகள் உள்ளன. கடந்த 2½ ஆண்டுகளாக கடை வாடகை ரூ.92லட்சம் கட்டாமல் உள்ளதாக கூறி திருப்பத்தூர் நகராட்சி அலுவலக அதிகாரிகள் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு சீல் வைத்தனர்.

தகவல்அறிந்த தினசரி காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் வஜ்ஜிரம் தலைமையில் மாவட்ட கலெக்டர் சிவன்அருளை சந்தித்து மனு அளித்தனர். அப்பொழுது வாடகை செலுத்துவதாகவும் உறுதி அளித்தனர். தினசரி காய்கறி மார்க்கெட் கடைகள் சீல்லை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

பின்னர் திருப்பத்தூர் நகராட்சிக்கு வந்த வியாபாரிகள் மார்க்கெட்டில் 134 கடைகளில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் தேங்கி உள்ளதாகவும் திருவண்ணாமலை பெங்களூர் பகுதிகளில் இருந்து லாரிகளில் தக்காளி காய்கறிகள் வந்துள்ளது.

அதனை எடுத்து அனைத்து கடைகளில் கொடுத்து பதமாக வைக்க வேண்டும் இல்லை என்றால் பல லட்ச ரூபாய் தக்காளி மற்ற காய்கறிகள் அழுகிவிடும் நகராட்சி சார்பில் பல முறை நாங்கள் வாடகை செலுத்தும் போதும் கம்ப்யூட்டரில் வாடகை பணம் ஏறவில்லை எனக்கூறி வாங்க மறுத்து விட்டதாக கூறி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

தகவலறிந்து அதிமுக நகரச் செயலாளர் டி டி குமார் தலைமையில் நகராட்சி ஆணையாரிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த போது அவரை சந்திக்க மறுத்து விட்டார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அங்கு குவிந்தனர் நகராட்சிக்கு முன்பு தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது .

திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் நேரில் வந்து தினசரி காய்கறி மார்க்கெட் சிலையை அப்புறப்படுத்தி தர வலியுறுத்தினார். ஆனால் நகராட்சி ஆணையாளர் அவரை சந்திக்க மறுத்தார்.

மீண்டும் கலெக்டர் வேலூர் நகராட்சி மண்டல இயக்குனர் விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காய்கறி மார்க்கெட்டில் சீல் அப்புறப்படுத்தப்பட்டது தொடர்ந்து அதிகாலை 3 மணி வரை போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News