செய்திகள்
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்த காட்சி.

புதுவை வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Published On 2020-02-19 13:53 GMT   |   Update On 2020-02-19 13:53 GMT
புதுவையில் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி, பிப்.19-

குற்றவியல் நடை முறை சட்டத்தில் கொண்டு வரப் பட்டுள்ள புதிய விதிகள் வக்கீல் தொழிலுக்கு மிகவும் பாதகமாக உள்ளது.

எனவே அந்த விதிகளை ஐகோர்ட்டு மற்றும் தமிழக அரசு மாற்ற வேண்டும். தமிழக வக்கீல்களுக்கான சேமநல நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் களை பதிவு செய்ய உத்தர விடும் அதிகாரத்தை கீழமை நீதிமன்றங்களுக்கு வழங்கவேண்டும். தமிழக இளம் வக்கீல்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 2009-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வக்கீல்கள், நீதிபதிகள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம், புதுவையில் 2 நாட் கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என வக்கீல்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதன்படி புதுவையில் வக்கீல்கள் சங்க தலை வர் முத்துவேல் தலை மையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கோர்ட்டிற்கு செல்லாமல் வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர்.

வக்கீல்கள் வராததால் வழக்குகள் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளையும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் கோர்ட்டு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News