செய்திகள்
கிரண்பேடி

ரேசன்கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பணம் வழங்குவதால் எந்தவித பாதிப்பும் இல்லை- கிரண்பேடி

Published On 2020-02-15 06:25 GMT   |   Update On 2020-02-15 06:25 GMT
புதுவையில் ரேசன்கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பணம் வழங்குவதால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாட்ஸ்-அப்பதிவில் கூறியிருப்பதாவது:-

ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வினியோகம் தொடர்பாக தொடர்ந்து தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது என்பதால் அதற்கான விளக்கத்தை தருகிறேன்.

புதுவை நிர்வாகத்தை பொறுத்தவரை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு அரிசியை வாங்கலாம். உண்மையில் இதற்கான அர்த்தம் அதிக விலைக்கு அரிசியை வாங்கி, பாதுகாத்து குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்க வேண்டும். இது அரசுக்கு மிகப்பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். அரசிடம் பணம் இல்லாதபோது அரிசிக்காக பணத்தை செலவிட வேண்டியிருக்கும்.

தற்போது நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துவதால் எந்தவித பாதிப்பும் இல்லை. பயனாளிகள் தாங்கள் விரும்பிய தரமான அரிசியை, விரும்பிய நேரத்தில் நேரடியாக வெளிமார்க்கெட்டில் பெற்றுக்கொள்கின்றனர். இது எந்தவிதத்திலும் இந்திய உணவுக்கழகம், பொது வினியோக திட்டத் தில் பாதிப்பை ஏற்படுத்த வில்லை.

அரசின் பட்ஜெட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பயனாளிகளுக்கு நேரடியாக பணம் வழங்குவது வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது. பொது அக்கறையின் கீழ் நிதியை கையாள்வதில் இதுதான் சிறந்த முறையாக உள்ளது.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News