செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும்- பட்ஜெட்டில் தகவல்

Published On 2020-02-14 05:11 GMT   |   Update On 2020-02-14 05:11 GMT
நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபையில் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். அவரது உரையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.27 சதவீதம் இருக்கும். தமிழக பொருளாதார வளர்ச்சியானது தேசிய பொருளாதார வளர்ச்சியை விட அதிகமாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும். மொத்த வருவாய் ரூ.2,19,375 கோடியாகவும், செலவு 2,41,601 கோடியாகவும் இருக்கும். பற்றாக்குறை ரூ.22,226 கோடியாக இருக்கும்.



2020-21 நிதியாண்டில் அதிக விளைச்சல் தரும் பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் பருத்தியில் விளைச்சல் தரும் ரகங்கள் அறிமுகம் செய்யப்படும். நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருத்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.

2020-21ம் நிதியாண்டில் தமிழக கல்வித்துறைக்கு 34,181 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறைக்கு ரூ.20,115.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. தொல்லியல் துறைக்கு 31.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News