செய்திகள்
கோப்பு படம்

திருப்பூரில் ஆவணங்கள் இல்லாமல் ஓட்டிய 7 ஆட்டோக்கள், தண்ணீர் லாரி பறிமுதல்

Published On 2020-02-08 12:14 GMT   |   Update On 2020-02-08 12:14 GMT
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டிய 7 ஆட்டோக்கள் மற்றும் தண்ணீர் லாரி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்:

திருப்பூரில் முறைகேடாக இயக்கும் வாகனங்கள் குறித்து திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ குமார் தலைமையிலான அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மங்கலம் ரோட்டில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கூட்ஸ் ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி அதன் ஆவணங் களை தணிக்கை செய்தனர்.

அப்போது எப்சி இல்லாமல் ஓட்டிய 7 கூட்ஸ் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்களை ஏற்றிச்செல்லும் வேனில் பனியன் பண்டல்களை ஏற்றிச்சென்ற ஒரு ஆம்னி வாகனத்தை பிடித்து அபராதம் விதித்தனர். அதே போன்று அந்த வழியாக தண்ணீர் ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரியை நிறுத்தி ஆய்வு செய்ததில் எப்சி, பர்மிட் இல்லாமல் இயக்கியது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த லாரியையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் மேலும் முறைகேடாக, உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டிய பல்வேறு வாகனங்களுக்கு சுமார் ரூ. 28 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுகுறித்து வடக்கு ஆர்.டி.ஓ. குமார் கூறுகையில், முறைகேடாக இயக்கும் வாகனங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். வாகன உரிமையாளர்களும் ஓட்டுனர்களும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News