செய்திகள்
கோப்புப்படம்

ஜீவானந்தபுரத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை

Published On 2020-02-05 09:25 GMT   |   Update On 2020-02-05 09:25 GMT
புதுவை ஜீவானந்தபுரத்தில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை ஜீவானந்தபுரம் பகத்சிங் வீதியை சேர்ந்தவர் சந்தரமூர்த்தி. இவர் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 46). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று லட்சுமி உழந்தை கீரப்பாளையத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வருவதாக கணவரிடம் கூறி சென்றார்.

பின்னர் லட்சுமி இரவு வீட்டுக்கு தாமதமாக சென்றார். இதனால் சந்தரமூர்த்தி கேட்டதற்கு இறுதி சடங்குகள் காலதாமதமாக நடந்ததாகவும், இதனால் வீட்டுக்கு உடனே வர முடியவில்லை என காரணம் கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் மறுநாள் காலை சந்தரமூர்த்தி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த லட்சுமி வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்றார்.

இதில் மயங்கி விழுந்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், அதன்பிறகு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது கணவர் சந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News