செய்திகள்
கைது

உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் மோதல்- 21 பேர் கைது

Published On 2020-02-04 09:39 GMT   |   Update On 2020-02-04 09:39 GMT
உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் மோதலில் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

நாகமலை புதுக்கோட்டையை அடுத்த காமாட்சி புரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 42). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கருப்பசாமியின் சகோதரர் தவமணியின் மகன் கண்ணன் (24) அந்தப்பகுதியில் உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த சிலர் அவருடன் தகராறில் ஈடுபட்டனர். உடனடியாக கண்ணனுக்கு ஆதரவாக பாண்டி, முத்துலிங்கம் மனைவி பழனி அம்மாள் (60) தவமணி மகள் ராக்காயி (20) மற்றும் கருப்பையா மனைவி சேங்கி (33) வந்தனர்.

இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து மோதல் ஏற்பட்டது.

இதில் கண்ணன், பாண்டி, பழனியம்மாள், ராக்காயி, சேங்கி ஆகிய 5 பேருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கருப்பையா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து 5 பேரை தாக்கியதாக காமாட்சிபுரத்தை சேர்ந்த பிரதீப் (27), சுதாகர் (19), சதீஷ், பிரபாகரன் (27), பூங்கொடி (35), உமா மகேஸ்வரி (23), சாந்தி ஆகிய 7 பேரையும் கைது செய்தார்.

இதே போல் உமா மகேஸ்வரி புகாரின் பேரில் கருப்பையா (42), கண்ணன் (24), தவமணி (56), முருகானந்தம் (32), ராஜேஷ் கண்ணன் (26), ராமச்சந்திரன் (36), சிவக்குமார் (47), வரதராஜன் (35), சக்திவேல் (23), விஸ்வா (19), அக்னி வீரபத்திரன் (17), ராமசாமி (31), சேங்கி (33), வள்ளி (40) ஆகிய 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News