செய்திகள்
பணம் பறிப்பு

புதுவண்ணாரப்பேட்டை அருகே வாலிபர்களை தாக்கி பணம் பறிப்பு

Published On 2020-02-04 06:39 GMT   |   Update On 2020-02-04 06:39 GMT
புதுவண்ணாரப்பேட்டை அருகே வாலிபர்களை தாக்கி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித் குமார்.புகைப்பட கலைஞர். இவர் வீட்டருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் திடீரென அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்களை கட்டையால் தாக்கி அவர்களிடம் இருந்து 1.500 ரூபாயை பறித்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News