என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money snatch"

    • கைபேசியின் மூலம் தகாத மற்றும் பாவியல் ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளார்.
    • பிரம்மநாயகத்தை பல முறை தொலைபேசியில் எச்சரித்துள்ளார்.

    சேலம் பள்ளப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலத்தில் நடந்து சென்றவரிடம் செல்போன் மற்றும் பணம் பறிப்பு என்று வெளிவந்த செய்தி குறித்து காவல் துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமகிருஷ்ணன் அம்பேத்கார் காலனி அதிகாரிப்பட்டி அம்மாபேட்டை என்பவர் ஒரு சிறுமியுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) சுமார் ஒரு வருடமாக நட்பில் இருந்துள்ளார்.

    சுமார் 6 மாதங்களுக்கு முன்பு பிரம்மநாயகம் என்பவர் அந்த சிறுமிக்கு தவறாக கைபேசி அழைப்பு கொடுத்து தன்னை அவளுடைய உறவினர் என்று அறிமுகப்படுத்தி மரியாதைக்குன்றிய வார்த்தைகளில் பேசியுள்ளார்.

    இதை சிறுமி ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தபோது அவர் பிரம்மநாயகத்தை பல முறை தொலைபேசியில் எச்சரித்துள்ளார்.

    சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பிரம்மநாயகம் மீண்டும் சுரேஷ் என்னும் பெயரில் இன்ஸ்டாகிராம் ஐடி நுவங்கி அதன் வழியாக தொடர்பு கொண்டு கைபேசியின் மூலம் தகாத மற்றும் பாவியல் ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளார்.

    சிறுமி அவரை பிளாக் செய்து அவர் அனுப்பிய செய்திகளை ராமகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். பிரம்மநாயகத்தை பிடிப்பதற்காக ராமகிருஷ்ணன் ஒரு போலியான இன்ஸ்டாகிராம் ஐடி ஒரு பெண் பெயரில் உருவாக்கி சில நாட்களாக பிரம்மநாயகத்துடன் இன்ஸ்டாகிராமில் உரையாடியுள்ளார்.

    ராமகிருஷ்ணளின் நோக்கம் பிரம்மநாயகத்தை சேலத்திற்கு வரசெய்து அவர் அனுப்பிய தகாத செய்திகள் மற்றும் புகை படங்களை நீக்க செய்து மேலும் இனி சிறுமியை தொந்தரவு செய்யாதவாறு எச்சரிப்பதற்காகவும் அந்த ஆன்லைன் உரையாடல் அடிப்படையில் பிரம்மநாயகம் இன்று 25.10.2025 ம்தேதி சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

    ராமகிருஷ்ணன் அவரது நண்பர்கள் வினிக்குமார் மற்றும் பிரதீப்ராஜ் மூவரும் பிரம்மநாயகத்தை பின்தொடர்ந்து பேருந்து நிலையம் அருகிள் உள்ள பாலம் அருகில் வருமாறு கேட்டுள்ளனர்.

    அங்கு அவர்கள் பிரம்மநாயகத்தை தாக்கி அவரது அலைப்பேசியை பறித்து உடைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த தாக்குதலின் நோக்கம் பிரம்மநாயகம் இனி அந்த சிறுமியை தொந்தரவு செய்யாமல் இருப்பதையும் அவளுக்கு அனுப்பிய தகாத செய்திகள் மற்றும் புகைப்படத்தை அவரது மொபைலில் இருந்து நீக்குவதை உறுதி செய்வதே ஆகும்

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், பூச்சி ராஜேஷ் ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமார், ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை பஸ் டிப்போ மற்றும் சேணிஅம்மன் கோவில் அருகில் வண்டியில் காய்கறி கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், பூச்சி ராஜேஷ் ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமார், ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யாவை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 30). பட்டதாரி வாலிபரான இவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ முடிவு செய்தார். அதன்படி தனது தலையில் முடி இல்லாததால் விக்கு வைத்துக் கொண்டார். ஆடம்பரமான விலை உயர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு சினிமா நடிகர் நடிகைகள் அரசியல் தலைவர்கள் மற்றும் வணிக பிரபலங்களுடன் செல்பி போட்டோ எடுத்து போல மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    திருமண ஆன்லைன் வலைதளங்களில் இவரது படங்களை பார்த்த இளம் பெண்கள் பலரும் இவரை தொடர்பு கொண்டனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நித்யா இளம் பெண்களை காபி ஷாப் மற்றும் ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் இளம் பெண்களின் அனுதாபத்தை பெறுவதற்காக தனது கையில் உள்ள வெட்டு காயங்களை காண்பித்தார்.

    இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களது செல்போன் எண்களை வாங்கி நீண்ட நேரம் பேசி மயக்கினார். வாட்ஸ் அப்பில் பெண்களை கவரக்கூடிய வகையில் தகவல்களை அனுப்பினார்.

    இதனை உண்மை என நம்பிய இளம் பெண்கள் நித்யாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமுள்ளதாக அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இளம்பெண்களை ஓட்டலுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். அப்போது தனது செல்போனில் இளம்பெண்களை நிர்வாண வீடியோ எடுத்துள்ளார் .

    ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாக இளம் பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். நித்யாவிடம் சிக்கிய இளம் பெண் ஒருவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இளம் பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து கச்சி பவுலி போலீசில் புகார் செய்தனர்.

    விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது ஏராளமான இளம் பெண்களின் ஆபாச வீடியோ இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நித்யா மீது இதுவரை 2 பெண்கள் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யாவை கைது செய்தனர்.

    பொன்னேரி அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் இர்பான். லாரி டிரைவர். இவர் லாரியில் வளர்ப்பு மீன் குஞ்சுகளைஏற்றிக் கொண்டு பொன்னேரி அடுத்த குண்ண மஞ்சேரி அருகில் அதிகாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம வாலிபர்கள் கத்திமுனையில் டிரைவர் இர்பானை மிரட்டி ரூ. 6 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுவை கைது செய்தனர். அவரது கூட்டாளியான நெய்தவாயல் பகுதியை சேர்ந்த ஒருவரை தேடிவருகின்றனர்.

    கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு அலுவலர் போன்று செல்போனில் பேசி நூதன முறையில் மர்ம நபர் வியாபாரிகளிடம் பணம் பறிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் ஏராளமான உணவு விடுதிகள் மற்றும் மளிகைக் கடைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக உணவு விடுதி மற்றும் மளிகைக்கடை உரிமையாளர்களிடம் நான் உணவு பாதுகாப்பு அலுவலர் பேசுகிறேன் என்று கூறி உங்களை எனக்கு நன்றாக தெரியும் என்றும், தான் தற்போது வெளியூரில் இருப்பதாகவும் வாகனத்திற்கு டீசலுக்காக பணம் வேண்டும் என கேட்டு செல்போன் மூலம் பணம் பறிக்கும் செயலில் மர்ம நபர் ஈடுபட்டுள்ளார்.

    மேலும் இவரது பேச்சை உண்மை என நம்பி கொடைக்கானலில் 10-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கூகுல் பே, போன் பே மூலமாக பணம் செலுத்தி ஏமாந்து உள்ளனர்.

    மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர் போன்று பணம் கேட்கும் ஆடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் போன்று போனில் பேசி பணம் கேட்கும் மர்ம நபரிடம் வணிகர்கள் யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்த மர்ம நபர் தனது செல்போனை பயன்படுத்தினால் சிக்கிக்கொள்வோம் என்பதால் கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதிகளிலுள்ள முன் பின் தெரியாத பெட்டி கடைக்காரர்களிடம் லாவகமாக பேசி அவர்களுடைய கூகுல் பே, போன் பே உள்ள செல்போன் எண்களை வாங்கி நூதனமுறையில் கொடைக்கானல் வணிகர்களிடம் இந்த எண்ணுக்கு பணத்தை அனுப்பும்படி கூறி உள்ளார். பின்னர் பெட்டிக்கடைக்காரர்களிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    கரூர் அருகே பணம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் வெங்கமேடு அருகே உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (வயது 38). இவர் வாங்கபாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அருள்பிரகாஷிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.700 திருடி உள்ளார்.இதையடுத்து வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் அருள்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய புதுக்கோட்டை மாவட்டம் காமராஜர்புரத்தை சேர்ந்த பாண்டி (28) என்ற வாலிபரை கைது செய்தார்.
    நாசரேத் அருகே தொழிலதிபரை தாக்கி ரூ.1 லட்சம் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    நாசரேத் அருகே உள்ள அரியான்மொழியைச் சேர்ந்தவர் அந்தோணி பிச்சை. இவரது மகன் வேல்துரை (வயது47). தொழிலதிபர். சென்னையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பட்டு மகன் ராஜலிங்கம். இவர் வேல்துரை நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் சூப்பர் மார்க்கெட் பணத்தை கையாடல் செய்ததாக ராஜலிங்கத்தை வேலையை விட்டு நீக்கினார் வேல்துரை. இதனால் வேல்துரை மீது ராஜலிங்கம் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே அரியான் மொழியில் தான் கட்டி வரும் வீட்டை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அச்சம்பாடு அருகே வேல்துரை வந்தபோது ராஜலிங்கம் உட்பட 6 பேர் கும்பல் பைக்கை வழிமறித்தனர். பின்னர் வேல்துரையை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    காயமடைந்த வேல்துரை இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ராஜலிங்கம், முத்துலிங்கம், முத்துக்குமார், சரவணகுமார், மற்றொரு ராஜலிங்கம், சித்திரை செல்வம் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளியை வெட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோயம்பேடு பூ மார்கெட்டில் தங்கி வேலை செய்து வருபவர் முருகன் (48). நேற்று மாலை அவர் பூ மார்கெட்டில் உள்ள கடைக்கு வந்து கொண்டிருந்தார் அப்போது முருகனை வழிமறித்த வாலிபர் பணம் கேட்டு மிரட்டினர். திடீரெனஅவன் முருகனை கத்தியால் வெட்டி பையில் இருந்த பணத்தை பறித்து தப்பி சென்றுவிட்டான்.

    கையில் வெட்டு காயமடைந்த முருகன் இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது நெற்குன்றம் சீமாத்தம்மன் நகர் 2வது செக்டாரைச் சேர்ந்த சரண் என்பது தெரிந்தது. மதுரவாயலில் பதுங்கி இருந்த சரணை நேற்று இரவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கைதான சரண் ஏற்கனவே கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு மார்க்கெட் , மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தருமபுரி அருகே டாஸ்மாக் ஊழியர் மனைவியிடம் நூதன முறையில் நகை, பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மேல்எண்டப்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவர் டாஸ்மாக் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி பழனியம்மாள் (வயது42). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வங்கியில் அடகு வைத்திருந்த 18 பவுன் நகையை மீட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர்.

    அப்போது, அவர்கள் மதிகோன்பாளையம் ரவுண்டானா அருகே உள்ள பழக்கடையில் பழங்களை வாங்கி கொண்டிருந்தனர்.

    அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2பேரும் ரூபாய் நோட்டை கீழே போட்டு கணேசனையும், பழனியம்மாளையும் திசை திருப்பிவிட்டு வண்டியில் இருந்த 18 பவுன் நகையையும், ரூ.40 ஆயிரத்தையும் எடுத்து கொண்டு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை தப்பி சென்றுவிட்டனர்.

    இந்த சம்பவத்தால் கணேசன் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் 2 மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் கணேசனையும், பழனியம்மாளையும் வங்கியில் இருந்து நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்தாக தெரிகிறது.

    பின்னர் அவர்கள் மதிகோன்பாளையம் ரவுண்டானாவில் உள்ள பழக்கடை அருகே 2 பேரையும் நூதன முறையில் ஏமாற்றி நகையையும், பணத்தையும் எடுத்து சென்றது உள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மதிக்கோன்பாளையம் ரவுண்டானா அருகே நூதன முறையில் பெண்ணிடம் நகை, பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோயம்பேடு அருகே கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    மாதவரம் சாத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர். ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு கோயம்பேடு நூறடி சாலையில் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் ஏறிய 3 பேர் கும்பல் விருகம்பாக்கம் செல்லுமாறு கூறினர். ஆட்டோ சிறிது தூரம் சென்றதும் திடீரென அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி குணசேகர் பையில் இருந்த ரூ.1000த்தை பறித்து 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் பதுங்கி இருந்த திருமுல்லை வாயில் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.

    வில்லிவாக்கத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    நங்கநல்லூரைச் சேர்ந்தவர் ஷியாம்சுந்தர். இவரது நண்பர் வெங்கடேஷ்குமார். இருவரும் கல்லூரி மாணவர்கள்.

    நேற்று இரவு ஷியாம்சுந்தர், வெங்கடேஷ்குமாருடன் வில்லிவாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகே உள்ள செல்போன் கடைக்கு சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கும்பல் ஷியாம்சுந்தர், வெங்கடேஷ்குமாரை தாக்கினர்.

    பின்னர் 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே காலி மைதானத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு கல்லூரி மாணவர்களை தாக்கி செல்போன், பணம், மோதிரத்தை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

    இதுகுறித்து ஐ.சி.எப். போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    கீழ்ப்பாக்கத்தில் ஏ.டி.எம்.மில் தனியார் ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    சென்னை:

    ஆதம்பாக்கம் குமரபுரத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று மாலை கீழ்ப்பாக்கம் லேண்டன்ஸ் ரோட்டில் உள்ள ஏ.டி.எம்.மில் பணத்தை செலுத்த சென்றார். பர்சில் இருந்து பணத்தை எடுத்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது ஒரு திருநங்கை மற்றும் 15 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

    ராயப்பேட்டை, புதுப்பேட்டை கார்டன் சந்து பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி மோனிஷா இவர்கள் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நியூ ஆவடி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மோனிஷா வைத்திருந்த பையை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். அதில் 2 செல்போன், ரூ.2 ஆயிரம் பணம் இருந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். #Robbery

    ×