அயனாவரத்தில் பணிமுடிந்து வந்த ரெயில்வே ஊழியரை தாக்கி பணம் பறித்த கும்பல்

அயனாவரத்தில் பணிமுடிந்து வந்த ரெயில்வே ஊழியரை தாக்கி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் பறிப்பு
பணம் பறிப்பு
Published on

ஆர்.கே.நகர்:

அயனாவரம், பனந்தோப்பு ரெயில்வே காலனியில் வசித்து வருபவர் சங்கர். இவர் ஐ.சி.எப்.பில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு சங்கர் பணி முடிந்ததும் வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கான்ஸ்டபிள் சாலையில் இருளான பகுதியில் வந்தபோது திடீரென 4 வாலிபர்கள் அவரை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினர்.

மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன், பணத்தை பறித்து கீழே தள்ளினர். அவரது தலையிலும் கல்லால் தாக்கினர். கீழே விழுந்ததில் சங்கரின் இடுப்பில் அருகில் கிடந்த இரும்பு கம்பி குத்தியது. இதில் அவர் அலறிதுடிட்தார்.

உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவ்வழியே சென்றவர்கள் சங்கரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஓட்டேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம கும்பல் சங்கரை சுற்றி வளைத்து தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதனை வைத்து ஓட்டேரியை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com