search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தாக்குதல்"

    • யூடியூப் சேனலை பகிர்ந்து கொண்டு அனைவரும் குழுவில் சேரும்படி கேட்டு கொண்டார்.
    • ரோஹித் குமார் கூறிய புகார்கள் உண்மையா என்றும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மெல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரோஹித் குமார். இவர் பிரதமர் மோடியை புகழ்ந்து ஒரு பாடலை இயற்றியுள்ளார். இந்த பாடலை தனது யூடியூப்பில் பகிர்ந்து உள்ளார். மேலும் அந்த யூடியூப் சேனலை பகிர்ந்து கொண்டு அனைவரும் குழுவில் சேரும்படி கேட்டு கொண்டார். அப்போது அவரை தொடர்பு கொண்ட ஒரு நபரிடம் பாடலை பகிரவும், யூடியூப் சேனல் குழுவில் சேரவும் கேட்டு கொண்டார்.

    ரோஹித் குமார் பாடிய பாடலை பாராட்டிய அந்த நபர் தனது நண்பர்களை சந்திக்கலாம் என்று கூறி அழைத்து சென்று உள்ளார். பின்னர் அங்கு ஒரு கும்பல் அறைக்குள் வைத்து ரோஹித் குமாரை சரமாரியமாக அடித்து உதைத்து உள்ளனர். பின்னர் அந்த நபர்கள் ரோஹித் குமார் மீது சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது.

    அவர்களிடம் இருந்து தப்பி வந்த ரோஹித் குமார் இது குறித்து மைசூரு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரோஹித் குமார் தாக்கப்பட்ட இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், ரோஹித் குமார் கூறிய புகார்கள் உண்மையா என்றும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • நாகர்கோவில் ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
    • சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர், ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

    நாகர்கோவில்:

    மது உள்ளிட்ட போதைப் பொருட்களால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதனால் போதை பழக்கத்தை ஒழிக்க அரசு நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் போதை பழக்கமும் அதனால் பல பிரச்சனைகளும் தினமும் தொடர்ந்தே வருகின்றன.

    இந்த நிலையில் சினிமாவில் போதைக் கும்பல், யாரிடமாவது வம்பிழுத்து விரட்டி விரட்டி தாக்குவது போன்ற ஒரு காட்சி, சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குமரி மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஒரு வாலிபரை, ஒரு கும்பல் மாறி மாறி தாக்குவதும் அந்த வாலிபர் கீழே விழுந்த நிலையிலும், அவரை தாக்கி சட்டையை கிழிப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளன.

    மது போதை தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என தற்போது தெரியவந்துள்ளது. அதுவும் போலீஸ் நடமாட்டம் அதிகம் உள்ள ஆயுதப்படை மைதானம் அருகிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    நாகர்கோவில் ஆயுதப்படை குடியிருப்பு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு வட்டக்கரை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு கும்பல் மது அருந்திக் கொண்டிருந்துள்ளது. வட்டக்கரை வாலிபர் மது வாங்கி விட்டு புறப்பட்ட போது, அந்தக் கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சிறிது நேரத்தில் இது மோதலாக மாறியது. மது அருந்திக் கொண்டிருந்த கும்பல், வட்டக்கரை வாலிபர் மீது தாக்குதல் நடத்தியது. அந்த வாலிபர் சாலையில் கீழே விழுந்தபோதும், கும்பல் விடாமல் தாக்கி உள்ளது. ஒரு கட்டத்தில் அவரது சட்டை கிழிந்தது. இருப்பினும் விடாமல் கும்பல் தாக்கியது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்களில் சென்ற பலரும் இதனை கண்டு கொள்ளாமல் செல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது இது போன்ற தாக்குதல் இந்தப் பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் போதைக்கு அடிமையான கும்பல் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் சிலர் தெரிவித்தனர். சம்பத்தன்று நடந்த தாக்குதல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர், ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். மோதல் சம்பவம் குறித்த வீடியோ வைரலான நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிப்பது யார்? என்பது அதை விட பரபரப்பாக உள்ளது. சம்பவம் நடந்த பகுதி நேசமணி நகர் போலீசுக்கு உட்பட்டதா? கோட்டார் போலீசுக்கு உட்பட்டதா? என்பதில் ஒரு உடன்பாடு வராததால் வழக்கு பதிவு செய்வதில் தாமதமான நிலை நிலவுகிறது.

    • ராஜ்குமாருக்கும் 5 பேர் கொண்ட கும்பலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • ராஜ்குமாரை தாக்கிய கும்பல் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி சென்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி அடுத்த ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணிக்கு மேல் அருந்ததியர் காலனியில் 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து அங்கு வசித்து வந்த சுப்பிரமணி மகன் ராஜ்குமார் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். பின்னர் ராஜ்குமாருக்கும் 5 பேர் கொண்ட கும்பலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் 5 நபர்களும் சேர்ந்து ராஜ்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    அதில் ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜகுமாரி வெட்ட சென்றபோது அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கூச்சலிடவே ஆட்டுக்காரன்பட்டி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தடுத்து 5 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர். அதற்குள் ராஜ்குமாரை தாக்கிய கும்பல் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி சென்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட ராஜ்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை செய்ததில் தொவரந்தொட்டி, பகுதியைச் சார்ந்த தெரிந்த நபர்கள் 5 பேர் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே ஆட்டுக்கார பட்டியில் ஆதி திராவிட நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டாவிற்காக ஒதுக்கிய நிலம் சம்பந்தமாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த பகுதிக்குள் புகுந்து 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம வாலிபர் ரமேசிடம் மது குடிக்க பணம் கேட்டு ரகளை செய்தார்.
    • மது குடிக்க பணம் தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த வாலிபர் கூட்டாளிகளுடன் வந்து ரமேசை சரமாரியாக தாக்கினர்.

    போரூர்:

    சென்னை கோடம்பாக்கம், வரதராஜன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(40). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம வாலிபர் ரமேசிடம் மது குடிக்க பணம் கேட்டு ரகளை செய்தார். ஆனால் ரமேஷ் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் கூட்டாளிகளுடன் வந்து ரமேசை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் உடைத்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான சரண், சோகன் ஜோசப், அவினாஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • எதிர்தரப்பினர் லட்சுமணன் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர்.
    • மண்ணூர்பேட்டையை சேர்ந்த சூரியன், அருண், சுதாகர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அம்பத்தூர்:

    சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் லட்சுமணன்கார்த்திக்(21). ஏ.சி மெக்கானிக்கான இவர் அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கு அதே பகுதிைய சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காயம் அடைந்த லட்சுமணன்கார்த்திக் மீண்டும் அந்த பெண்ணை பார்க்க வந்ததாகதெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் லட்சுமணன் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பாக மண்ணூர்பேட்டையை சேர்ந்த சூரியன், அருண், சுதாகர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாக்குதல் மற்றும் சிறுநீர் கழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
    • தலைமறைவான அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆக்ரா:

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒருவரை வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கினார்.அந்த கும்பல் ஆபாசமாக திட்டியபடி அவரை கீழே தள்ளி தலையில் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் அப்படியே மயங்கி விட்டார்.

    அதன் பிறகு தான் அந்த மோசமான சம்பவம் அரங்கேறியது. காயத்துடன் உயிருக்கு போராடியவர் மீது வாலிபர் சிறுநீர் கழித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த தாக்குதலுக்கு ஆளானவரை பொதுமக்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று சேர்த்தனர். ஆனால் தாக்கப்பட்டவர் இது தொடர்பாக போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் தாக்குதல் மற்றும் சிறுநீர் கழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சுமார் 20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் இந்த செயலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஆதிய்யா என்ற வாலிபர் சிக்கினார். போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பு நடந்ததாகவும், தற்போது தான் அந்த வீடியோ காட்சி வெளியானதாவும் போலீசார் தெரிவித்தனர்.

    • தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.
    • பலத்த காயம் அடைந்த அவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கேளம்பாக்கம் மாதா கோவில் தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மொகரம் மண்டல் (40) உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள்பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று மாலை கட்டுமானப் பணி நடைபெற்ற இடத்தின் அருகில் மொகரம் மண்டல் நின்று கொண்டு இருந்தார். அப்போது மதுபோதையில் இருந்த வாலிபர்கள் திடீரென மொகரம் மணடலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கட்டை, கல்லால் சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேளம்பாக்கம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த வினீத் , பிரவீன், விஷ்வாஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடிவருகிறார்கள்.

    • தமிழர்களை விட, வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
    • வட மாநில தொழிலாளர்கள் கூட்டமாக, தமிழக வாலிபர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

    தமிழர்களை விட, வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தநிலையில் அனுப்பர்பாளையம் - வேலம்பாளையம் செல்லும் சாலையில் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள், தமிழக வாலிபர் ஒருவரை பெல்ட், கட்டை, உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    வட மாநில தொழிலாளர்கள் கூட்டமாக, தமிழக வாலிபர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பேக்கரியில், சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தபோது, வடமாநில தொழிலாளி ஒருவருக்கும், தமிழகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடமாநில தொழிலாளர், தன்னுடன் வேலை செய்யும் சக வட மாநிலத்தவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தாக்க வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மோதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் யாரென்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

    • சுரேஷ் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • மது குடித்தபோது நண்பர்களான அருண்குமார், ராஜேஷ் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    சென்னை:

    ராமாபுரம், மைக்கேல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்களான அருண்குமார், ராஜேஷ் உட்பட 15க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இரவு மது குடித்தபோது நண்பர்களான அருண்குமார், ராஜேஷ் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார் அருகில் கிடந்த கத்திரிக்கோலால் ராஜேசை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து, தோள்பட்டை மற்றும் இடுப்பில் பலத்த காயம் அடைந்த அவருக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபோதையில் இருந்த அந்த வாலிபர்கள் திடீரென பீர் பாட்டிலை எடுத்து தீனதயாளன் தலையில் ஓங்கி அடித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    முகப்பேர் அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது42). இவர் பன்னீர் நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நேற்று இரவு மது அருந்தினார். அப்போது அங்கிருந்த வாலிபர்களுக்கும் தீனதயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் இருந்த அந்த வாலிபர்கள் திடீரென பீர் பாட்டிலை எடுத்து தீனதயாளன் தலையில் ஓங்கி அடித்தனர்.

    இதில் மண்டை உடைந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • பூபதி தனது மனைவியுடன் குடும்பம் நடத்திய நண்பர் கண்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்ததை மறந்து விட்டு வா, மது குடிக்கலாம் என கூறி அழைத்துள்ளார்.
    • கண்ணனும் நண்பர் தானே அழைக்கிறார் என்று நம்பி திருவாக்கவுண்டனூர் பகுதியில் நண்பர் அழைத்த இடத்திற்கு வந்தார்.

    சேலம்:

    சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 36), வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா (27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பூபதியின் நண்பரான சேலம் அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு பகுதியை சேர்ந்த கண்ணன் (32) என்பவர் அடிக்கடி பூபதியின் வீட்டுக்கு வந்து சென்றார். இதில் கண்ணனுக்கும், சரண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்யா தனது 2 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் கண்ணனுடன் அவர் தனியாக குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கண்ணன் மற்றும் சரண்யாவை மீட்டு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம்-2-ல் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சரண்யா கணவருடன் செல்ல மறுத்து கண்ணனுடன் செல்வதாக எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் பூபதி தனது மனைவியுடன் குடும்பம் நடத்திய நண்பர் கண்ணனை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்ததை மறந்து விட்டு வா, மது குடிக்கலாம் என கூறி அழைத்துள்ளார். கண்ணனும் நண்பர் தானே அழைக்கிறார் என்று நம்பி திருவாக்கவுண்டனூர் பகுதியில் நண்பர் அழைத்த இடத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் இருவரும் மது குடித்தனர்.

    அப்போது பூபதி தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் கண்ணனை சரமாரியாக தாக்கினார். இதை சற்றும் எதிர்பாராத கண்ணன் அங்கிருந்து தலைதெறிக்க தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேன் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கண்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்ணன் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பூபதி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று அவர் போலீசாரிடம் சிக்கினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்க உள்ளனர்.

    • ஒரு வீட்டுக்குள் மர்ம வாலிபர் ஒருவர் குடிபோதையில் புகுந்தார்.
    • திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், ஜே,என் சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குள் மர்ம வாலிபர் ஒருவர் குடிபோதையில் புகுந்தார். அவரை அப்பகுதி மக்கள் மடிக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பதும் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×