செய்திகள்
விஜயகாந்த்

மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு-நதிகள் இணைப்பு திட்டங்கள் இல்லை: விஜயகாந்த்

Published On 2020-02-02 10:05 GMT   |   Update On 2020-02-02 10:50 GMT
மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு மற்றும் நதிகள் இணைப்பு திட்டங்கள் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் மத்திய அரசின் 2020-2021 பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2020-2021 மத்திய பட்ஜெட் நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது. வளர்ச்சி என்று பார்த்தால் வருமானவரி விகிதம் குறைப்பு, வீட்டுக் கடன் சலுகை, விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன், வேளாண்மை உள் கட்டமைப்பு, ஜவுளி தொழில் நுட்பம், ஆகியவற்றில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, விவசாயத்தை இரட்டிப் பாக்குவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது என்று பல வரவேற்கக்கூடிய அம்சங்கள் இருக்கும் பொழுதும் பல குறைகளும் இருக்கின்றது.

இன்றைய பொருளாதாரத்தின் நிலையை அறிந்து தனி நபரின் வருமானத்தை உயர்த்தக் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது. பல கோடி பேர் வேலைவாய்ப்பை உயர்த்துவதற்கு நல்ல செயல் திட்டங்களை அறிவிக்க வில்லை.

விவசாயத்துக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் நதிகள் இணைப்பு, நதிகள் இணைப்புக்காக எந்த ஒரு அறிவிப்பும் இந்த மத்திய பட்ஜெட் திட்டத்தில் இல்லை. எனவே குறைகளும் நிறைந்திருக்கிறது. மத்திய அரசின் இந்த பட்ஜெட் நிறைகளும், குறைகளும் இணைந்த மத்திய அம்சம் கொண்ட மத்திய பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News