செய்திகள்
தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை மீண்டும் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது

Published On 2020-01-30 06:00 GMT   |   Update On 2020-01-30 06:00 GMT
கடந்த 2 நாட்களாக விலை குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று ரூ. 31 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.
சென்னை:

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வந்தது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதட்டம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 8-ந்தேதி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. அதன்பிறகு விலை சற்று குறைவதும், மீண்டும் உயர்வதுமாக காணப்பட்டது.

கடந்த 2 நாட்களாக விலை குறைந்து வந்தது. சென்னையில் நேற்று மாலை ஒரு கிராம் ரூ.3856-க்கும், ஒரு பவுன் ரூ.30,848-க்கும் விற்பனை ஆனது. 

இன்று கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3888-க்கும், பவுனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.31,104-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல வெள்ளி விலையும் இன்று உயர்ந்தது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.49.70-க்கும் கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ஒரு கிலோ ரூ.49,700-க்கும் விற்பனையாகிறது.
Tags:    

Similar News