என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold rate"

    • இரண்டு நாள் தங்கம் விலை உயர்வுக்கு டிரம்பின் விசா அறிவிப்பு முக்கிய காரணம்
    • டிரம்ப் அறிவிப்பு உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தங்கம் நகை மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:-

    தங்கம் விலை இன்னும் உயர காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்வேன். இதற்கு முன்பாக பல காரணங்கள் இருந்தாலும், திடீரென இந்த இரண்டு நாள் விலை ஏற்றத்திற்கு (நேற்றும் இன்றும் சவரனுக்கு 2240 ரூபாய் உயர்ந்துள்ளது) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் விசா குறித்த அறிவிப்புதான் காரணம்.

    இது உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்க்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இவ்வாறு ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை ரூ.1720 உயர்வு.
    • தங்கம் விலை சவரனுக்கு ரூ.76,960க்கு விற்பனையாகிறது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து உயரந்துக் கொண்டே வருகிறது.

    கடந்த திங்கள் அன்று சவரனுக்கு ரூ. 80, செவ்வாய்கிழமை அன்று சவரனுக்கு ரூ. 400, புதன்கிழமை ரூ. 280, வியாழக்கிழமை அன்று ரூ.120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.

    தொடர்ந்து, நேற்று தங்கம் விலை இருமுறை உயர்ந்தது. அதாவது, காலையில் ரூ.520-ம், மாலையில் ரூ.520-ம் என சவரனுக்கு ரூ.1040 அதிரடியாக உயர்ந்து ரூ. 76,280-க்கும் விற்பனையானது

    இந்தநிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85, சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இதன்மூலம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.76,960க்கு விற்பனையாகிறது.

    கடந்த 2 நாட்களில் ரூ.1720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77,000 நெருங்கி வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.134க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1,34,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280

    28-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,240

    27-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,120

    26-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,840

    25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    29-08-2025- ஒரு கிராம் ரூ.134

    28-08-2025- ஒரு கிராம் ரூ.130

    27-08-2025- ஒரு கிராம் ரூ.130

    26-08-2025- ஒரு கிராம் ரூ.130

    25-08-2025- ஒரு கிராம் ரூ.131

    • நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.
    • இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,760-க்கும் விற்பனையானது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,840-க்கும், புதன்கிழமை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,120-க்கும், நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.

    தொடர்ந்து, இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470-க்கும், சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,760-க்கும் விற்பனையானது

    இந்நிலையில், தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு 520 அதிகரித்த நிலையில், தற்போது மேலும் 520 உயர்ந்துள்ளது.

    இதன்மூலம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.76,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.
    • தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,280 விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் கடந்த 5 நாட்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,290-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.

    அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,280 விற்பனை செய்யப்படுகிறது.

    முற்பகலில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்த நிலையில் பிற்பகலில் மேலும் விலை உயர்ந்து ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி 57,200 ரூபாயாக இருந்தது. ஜனவரி 15ஆம் தேதி 58720 ஆக அதிகரித்தது.
    • பிப்ரவரி 1ஆம் தேதி 61,960 ஆக அதிகரித்தது. பிப்ரவரி 15ஆம் தேதி 63,520 ஆக உயர்ந்தது.

    சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இப்படி சென்றால் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் கட்டாயம் ஒரு லட்சத்தை தொட்டு விட வாய்ப்புள்ளது.

    தங்கத்தின் மீதான அதிக ஆர்வம், உலகப் பொருளாதாரம், கச்சா எண்ணெய், தங்கத்தின் மீதான முதலீடு ஆகியவை தங்க விலை அதிகரிக்க முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.

    இந்த நிலையில் சென்னையில் கடந்த 3 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு 10,880 ரூபாய் அதிகரித்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி 57,200 ரூபாயாக இருந்தது. ஜனவரி 15ஆம் தேதி 58720 ஆக அதிகரித்தது.

    பிப்ரவரி 1ஆம் தேதி 61,960 ஆக அதிகரித்தது. பிப்ரவரி 15ஆம் தேதி 63,520 ஆக உயர்ந்தது,

    மார்ச் 1ஆம் தேதி 65,760 ஆக உயர்ந்தது. ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று 68,080 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 3 மாதங்களில் ஒரு சவரனுக்கு 10,880 ரூபாய் அதிகரித்துள்ளது.

    • கிராமுக்கு ரூ. 55 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் விலை 5,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து 70,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 40,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    அதன்படி, கிராமுக்கு ரூ. 55 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் விலை 5,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் விலை 40 ஆயிரம் ரூபாயை தாண்டியது. தங்கம் விலை அதிகரிப்பால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதேபோல், வெள்ளி கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து 70,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் விலை ஏற்றம் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • வெள்ளி விலை கிலோவுக்கு ரூ1300 உயர்ந்து 77,300க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து 5 ஆயிரத்து 475 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இன்றைய சந்தை நிலவரப்படி 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் விலை ஏற்றம் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ1300 உயர்ந்து 77,300க்கு விற்பனையாகிறது.

    • பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்ட நிலையில் தங்கம் விலை உயரத் தொடங்கியது.
    • சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5505 ரூபாயாக உள்ளது

    சென்னை:

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு சவரனுக்கு 600 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரு சவரன் 43320 ரூபாயாக இருந்தது.

    நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் வரும் காலங்களில் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. 

    இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 720 ரூபாய் வரை உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 44000-ஐ தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பிற்பகல் நிலவரப்படி சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5505 ரூபாயாகவும், ஒரு சவரன் 44 ஆயிரத்து 40 ரூபாயாகவும் விற்பனை ஆனது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 80 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய 80 காசுகளாக இருந்தது. பார் வெள்ளி (ஒரு கிலோ), ரூ.77800 ஆக இருந்தது.

    • சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை உயர்வு.
    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.5,510க்கு விற்பனை.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே இன்று 7வது நாளாக போர் நடந்து வருகிறது.

    இதன் எதிரொலியால், இன்றைய தினம் தங்கம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 54 டாலர்கள் அதிகரித்ததே உள்நாட்டிலும் விலை உயர காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.5,510க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதுபோல், தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.44,082க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது
    • நேற்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்த நிலையில், இன்று 45 ரூபாய் அதிகரிப்பு

    கடந்த வாரம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன்பின் இறங்கு முகமாகவும், ஏறுமுகமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை கிராம் ஒன்றிற்கு 45 ரூபாய் அதிகரித்து பவனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது.

    1 கிராம் தங்கம் 5700-க்கும், பவுன் 45,600 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. நேற்று ஒரு கிராம் (8 கிராம்) 5,655 ரூபாய்க்கும், ஒரு பவுன் 45,240 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

    24 காரட் தங்கம் ஒரு கிராம் 6,220 ரூபாய்க்கும், ஒரு பவுண் 49,460-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் தங்கம், கடந்த 18-ந்தேதி ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கும், 19-ந்தேதி 5,585 ரூபாய்க்கும், 20-ந்தேதி 5,660 ரூபாய்க்கும், 21-ந்தேதி 5,670-க்கும், 22-ந்தேதி 5,670-க்கும் விற்பனை ஆனது.

    23-ந்தேதி 5,660 ரூபாய்க்கும், 24-ந்தேதி 5675 ரூபாய்க்கும், நேற்று 5,655 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • இன்று தங்கம் விலை பவுனுக்கு 520 ரூபாய் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை மாறுபடும்.

    இந்நிலையில், தற்போது இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை உச்சமடைந்து உள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கிவிட்டது.

    கடந்த 19-ம் தேதி பவுன் ரூ. 44,680-க்கு விற்ற தங்கத்தின் விலை தொடந்து அதிகரித்து இன்று ரூ. 46 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது.

    நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 5,705- ஆகவும், பவுன் ரூ. 45,640 ஆகவும் இருந்தது. இன்று ஒரே நாளில் கிராம் ரூ.65-ம் பவுன் ரூ. 520-ம் உயர்ந்துள்ளது. இன்று கிராம் ரூ. 5,770-க்கும், பவுன் ரூ. 46,160-க்கும் விற்பனை ஆகிறது. இஸ்ரேல் போர் காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக நகைக்கடை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவை பொறுத்தவரை காலம் காலமாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில பெண்களிடம் தங்கத்தின் மீதான மோகம் அதிகமாக இருந்து வருகிறது. தங்க நகையை அணிவதை நம் நாட்டு பெண்கள் ஒரு கவுரவமாக நினைத்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது தங்கம் விலை வேகமாக உயர்ந்து வருவது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏழைகளுக்கு இது எட்டாக்கனியாக மாறி உள்ளது.

    தற்போது முகூர்த்த மாதம் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது. இதனால் நகை வாங்க இருந்தவர்கள் விலை உயர்வை நினைத்து கவலை அடைந்து இருக்கிறார்கள்.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. கிராம் ரூ. 77.50க்கும், கிலோ ரூ. 77,500-க்கும் விற்பனை ஆகிறது.

    • இன்று தங்கம் விலை பவுனுக்கு 232 ரூபாய் குறைந்துள்ளது.
    • 1 கிராம் தங்கம் 5,686-க்கும், பவுன் 45,488 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக உள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை மாறுபடும்.

    இந்நிலையில், தற்போது இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை உச்சமடைந்து உள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக தங்கத்தின் விலையும் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கிவிட்டது.

    கடந்த 19-ம் தேதி பவுன் ரூ. 44,680-க்கு விற்ற தங்கத்தின் விலை தொடந்து அதிகரித்து சில தினங்களுக்கு முன் ரூ. 46 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது.

    நேற்று ஒரு கிராம் 5,715 ரூபாய்க்கும், ஒரு பவுன் 45,720 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

    நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 5,715- ஆகவும், பவுன் ரூ. 45,720 ஆகவும் இருந்தது. இன்று ஒரே நாளில் கிராம் ரூ.29-ம் பவுன் ரூ. 232-ம் குறைந்துள்ளது. இன்று கிராம் ரூ. 5686-க்கும், பவுன் ரூ. 45,488-க்கும் விற்பனை ஆகிறது.

    ×