என் மலர்

    தமிழ்நாடு

    அதிர்ச்சி தந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை தாண்டியது
    X

    அதிர்ச்சி தந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.40 ஆயிரத்தை தாண்டியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிராமுக்கு ரூ. 55 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் விலை 5,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து 70,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 40,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    அதன்படி, கிராமுக்கு ரூ. 55 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் விலை 5,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் விலை 40 ஆயிரம் ரூபாயை தாண்டியது. தங்கம் விலை அதிகரிப்பால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதேபோல், வெள்ளி கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து 70,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×