செய்திகள்
கைது

திருவள்ளுவர் தினத்தன்று மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 61 பேர் கைது

Published On 2020-01-17 09:51 GMT   |   Update On 2020-01-17 09:51 GMT
திருவள்ளுவர் தினத்தன்று மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 61 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை:

திருவள்ளுர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனையும் மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

அதனையும் மீறி கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டது. கோவை மாநகரில் உக்கடம், பீளமேடு, போத்தனூர், குனியமுத்தூர், காட்டூர், வெரைட்டி ஹால் ரோடு, சாய்பாபா காலனி, ராமநாதபுரம், சிங்காநல்லூர், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 274 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கோவை புறநகர் பகுதிகளான பேரூர், பெரிய நாயக்கன் பாளையம், வடவள்ளி, வடக்கி பாளையம், சேத்தல் முடி, கருமத்தம் பட்டி, துடியலூர், அன்னூர், வால்பாறை, நெகமம், ஆனைமலை, கே.ஜி. சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற 38 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 329 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கோவை மாநகர், புறநகர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்றதாக 61 பேர் கைது செய்யப்பட்டு மொத்தம் 603 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News