செய்திகள்
கத்திக்குத்து

வில்லியனூர் அருகே கோஷ்டி மோதலில் அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து

Published On 2020-01-13 14:13 GMT   |   Update On 2020-01-13 14:13 GMT
வில்லியனூர் அருகே கோஷ்டி மோதலில் அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர்:

வில்லியனூர் அருகே சேந்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனுவாசன். இவருக்கு  இரட்டை மகன்கள் ராமன் (வயது31), லட்சுமணன் (31). இவர்களது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் வேலை செய்து வரும் வீரமணி (35) என்பவர் புதிதாக வீடுகட்டி வருகிறார்.

இதற்கிடையே வீரமணி வீட்டு கட்டுமான பொருட்களை சீனுவாசன் வீட்டு பகுதியில் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று  கட்டுமான பொருட்கள் வைத்திருந்த இடத்தில் ராமன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதற்கு வீரமணியின் மனைவி சுமதி எதிர்ப்பு தெரிவித்தார்.  இதனால் இருதரப்பினருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது சுமதியை ராமன்  கீழே பிடித்து தள்ளினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வீரமணி கத்தியை எடுத்து வந்து ராமனை குத்தினார். மேலும் இதனை தடுக்க முயன்ற லட்சுமணனையும் அவர் கத்தியால் குத்தினார். இதையடுத்து ராமன் பதிலுக்கு கத்தியை எடுத்து வந்து வீரமணியை குத்தினார். இந்த கத்திக்குத்தில் காயம் அடைந்த ராமன்- லட்சுமணன் ஆகிய இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து இரு தரப்பினரும் வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு உசேன் ஆகியோர் இருதரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   
Tags:    

Similar News