செய்திகள்
கோப்பு படம்

திருவள்ளூரில் தொழிற்சங்கத்தினர் மறியல் - 100 பேர் கைது

Published On 2020-01-08 07:05 GMT   |   Update On 2020-01-08 07:05 GMT
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது உள்பட மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளை எதிர்த்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆவடி நாகூர் கனி தலை தாங்கினார். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.திடீரென அவர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்ககளை கைது செய்தனர்.

திருவள்ளூரில் அனைத்து பஸ்களும் ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடியது. பொது மக்களுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை.
Tags:    

Similar News