செய்திகள்
திமுக

திருமங்கலம் யூனியனில் அதிமுக பாட்டு போட்டதால் திமுக.வினர் பதவி ஏற்க மறுப்பு

Published On 2020-01-06 06:07 GMT   |   Update On 2020-01-06 06:07 GMT
திருமங்கலம் யூனியனில் அதிமுக பாட்டு போட்டதால் திமுக.வினர் பதவி ஏற்பை புறக்கணித்து வெளியேறினர்.

திருமங்கலம்:

திருமங்கலம் யூனியனில் 16 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. சார்பில் 12 பேரும், தி.மு.க. சார்பில் 3 பேரும் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்டவரும் வெற்றி பெற்றார்.

இன்று காலை அனைவரும் பதவி ஏற்பதற்காக ஒன்றிய அலுவலகம் வந்தனர். தேர்தல் அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான உதயகுமார் புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அ.தி.மு.க. உறுப்பினர்கள் பதவி ஏற்று முடிந்ததும் தி.மு.க. உறுப்பினர்கள் பதவி ஏற்க தயாரானார்கள். அப்போது அ.தி.மு.க. பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேர்தல் அலுவலர் உதயகுமாரிடம் முறையிட்ட அவர்கள் பதவி ஏற்பை புறக்கணித்து வெளியேறினர். யூனியன் அலுவலக வாசலில் அமர்ந்து கோ‌ஷமிட்ட அவர்கள் 11-ந்தேதி பதவி ஏற்றுக்கொள்வதாக கூறி சென்று விட்டனர்.

இதனால் திருமங்கலம் யூனியன் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News