செய்திகள்
கோப்பு படம்

தனியார் பஸ்சில் குடிபோதையில் பயணிகளிடம் தகராறு செய்த கண்டக்டர்

Published On 2020-01-02 09:47 GMT   |   Update On 2020-01-02 09:47 GMT
கோவையில் இருந்து திருப்பூர் சென்ற தனியார் பஸ்சில் குடிபோதையில் பயணிகளிடம் தகராறு செய்த கண்டக்டரின் லைசென்சை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
திருப்பூர்:

கோவையில் இருந்து திருப்பூருக்கு ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ்சில் கண்டக்டராக கோவை ஒண்டிப்புதூர் ஆர்.ஜி.கார்டன் பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(32) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் இந்த பஸ் கோவையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருப்பூருக்கு சென்றது. அப்போது பணியில் இருந்த கண்டக்டர் ரவீந்திரன் பஸ்சில் பயணம் செய்த பயணிகளை தகாத முறையில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பயணிகள் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் பிற்பகல் 3 மணிக்கு திருப்பூர் வீரபாண்டி பிரிவுக்கு குறிப்பிட்ட தனியார் பஸ் வந்தது. அங்கு நின்றிருந்த அதிகாரிகள் பஸ்சை வழிமறித்து கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கண்டக்டர் ரவீந்திரன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரவீந்திரனின் கண்டக்டர் உரிமத்தை 6 மாதம் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News