செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

கன்னியாகுமரி அருகே வீடு புகுந்து நகை கொள்ளை

Published On 2019-12-28 11:50 GMT   |   Update On 2019-12-28 11:50 GMT
கன்னியாகுமரி அருகே வீடு புகுந்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம், மந்தாரம்புதூரை சேர்ந்தவர் ஞானமணி (வயது 59).

ஞானமணியின் உறவினர் ஒருவருக்கு நேற்று திருமணம் நடந்தது. இதற்காக ஞானமணி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.

நேற்று மதியம் அவர் திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பினார். வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் படுக்கை அறை ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டிருந்ததை கண்டார்.

அதிர்ச்சி அடைந்த அவர் படுக்கை அறைக்கு உள்ளே சென்று பார்த்தார். அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பொருள்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன.

மேலும் பீரோவில் இருந்த 4 கிராம் கம்மல்,2 கிராம் மோதிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. ஞானமணி வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

இதுபற்றி ஞானமணி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் மோப்ப நாய், கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று கொள்ளையரின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் 2 பேரின் கைரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

மோப்ப நாயும் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News