செய்திகள்
தங்கம்

தங்கம் விலை பவுனுக்கு 112 ரூபாய் உயர்வு

Published On 2019-12-24 08:01 GMT   |   Update On 2019-12-24 08:01 GMT
தங்கம் விலை பவுனுக்கு 112 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 320 ஆக உள்ளது.
சென்னை:

சென்னையில் கடந்த 16-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 976 ஆக இருந்தது. பின்னர் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.29 ஆயிரத்து 96 ஆக இருந்தது.

நேற்று பவுனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.29 ஆயிரத்து 208 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.112 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 320 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.14 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,665-க்கு விற்கிறது.

பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.49 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.49.30க்கு விற்கிறது.

Tags:    

Similar News