செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

தொடர் விடுமுறை- அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

Published On 2019-12-20 10:28 GMT   |   Update On 2019-12-20 10:28 GMT
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருப்பதால் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை:

தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இந்த தொடர் விடுமுறை விடப்படுவதாகவும், விடுமுறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை விடப்பட்டிருப்பதால், நாளை முதல் 31-ம் தேதி வரையிலான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், ஜனவரி 2-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News