செய்திகள்
அம்மன் கோவில் அகற்றம்

பாரிமுனை சந்திப்பு நடைபாதையில் இருந்த அம்மன் கோவில் அகற்றம்

Published On 2019-12-12 10:22 GMT   |   Update On 2019-12-12 10:22 GMT
பாரிமுனை சந்திப்பு நடைபாதையில் இருந்த அம்மன் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.
ராயபுரம்:

பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் ரோடு - ஆர்மேனியன் தெரு சந்திப்பில் உள்ள நடைபாதையில் அம்மன் கோவில் ஒன்று இருந்தது.

10 ஆண்டுகளாக இங்கு இருந்த அந்த கோவிலை தனியார் ஒருவர் பராமரித்து வந்தார். இது மக்களுக்கு இடையூராக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த கோவிலை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

கோர்ட்டு உத்தரவுப்படி அந்த கோவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் இடிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கோவிலை இடித்து அகற்றினார்கள்.

கோவில் இடிக்கப்படுவதையொட்டி, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நீண்ட நாட்களாக அந்த பகுதியில் இருந்த கோவில் இடித்து அகற்றப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News