செய்திகள்
கோப்பு படம்

தஞ்சை மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2019-12-10 10:47 GMT   |   Update On 2019-12-10 10:47 GMT
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் என ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம்:

கும்பகோணம் நகரம் முழுவதும் தற்போது மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் 140 சி.சி. டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகன போக்குவரத்து, மற்றும் மக்கள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கும்பகோணத்தில் குற்ற சம்பவங்கள் பெருமளவு குறைந்தன. இந்த நிலையில் கண்காணிப்பை மேலும் மேம்படுத்தம் வகையில் கும்பகோணம் நகரை 8 பிரிவுகளாக பிரித்து வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், உள்ள பகுதிகளில் மேலும் 100 சி.சி.டி.வி. கேமராக்கள் 20 லட்ச ரூபாய் செலவில் சிட்டி யூனியன் வங்கி சார்பில் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன.

இதனை கிழக்கு காவல் நிலையம் அருகே உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் மற்றும் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காம கோடி ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.

இதன்பின்னர் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் என ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தஞ்சை சரக காவல் எல்லைக்குட்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாத ஒரு லட்சம் பேர் மீதும், நாகை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் 50 சதவீத ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், கும்பகோணம் நகர டி.எஸ்.பி.ஜெயச்சந்திரன் உள்பட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News