செய்திகள்
தமிழ்நாடு போலீஸ்

இந்தியாவில் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையத்திற்கு 4-வது இடம்

Published On 2019-12-06 12:31 GMT   |   Update On 2019-12-06 12:31 GMT
இந்தியாவில் சிறந்த 10 காவல் நிலையங்களில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
தேனி:

இந்தியாவில் சிறந்த 10 காவல் நிலையங்களில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் 4-வது இடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

2019-ம் ஆண்டின் மிகச்சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. 

அந்தமான் அபெர்தீன் காவல் நிலையம் முதலிடமும், குஜராத் பலாசினார் காவல் நிலையம் 2வது இடமும் பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் அஜ்க் புர்ஹான்பூர் காவல் நிலையம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 

15,579 காவல் நிலையங்களில் இருந்து மிகச் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் அணுகுதல், நிதி வழங்க உதவுதல், விரைந்த விசாரணை அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 
Tags:    

Similar News