செய்திகள்
வந்தவாசி மீசநல்லூர் பெரிய ஏரி உடைந்து விளைநிலத்திற்குள் பயிரை மூழ்கடித்து வெள்ளம் பாய்ந்தோடிய காட்சி.

வந்தவாசி அருகே ஏரி மதகு உடைந்து 300 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது

Published On 2019-12-03 11:22 GMT   |   Update On 2019-12-03 11:22 GMT
வந்தவாசி அருகே கனமழையால் ஏரி மதகு உடைந்து தண்ணீரில் 300 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது.

வந்தவாசி:

வந்தவாசி அருகே உள்ள மீசநல்லூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. சமீபத்தில் பெய்த கன மழையால் ஏரி நிரம்பியுள்ளது.

இரவில் ஏரி மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் விளைநிலங்களுக்குள் சீறிபாய்ந்தது. அங்கு சுமார் 300 ஏக்கரில் நெற்பயிர்கள் நடவு செய்திருந்தனர்.

ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கியது. இன்று காலை ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறியதை கண்ட விவசாயிகள் திடுக்கிட்டனர்.

தண்ணீரை அடைக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனாலும் தண்ணீர் சீறிபாய்ந்து சென்றது.

இந்த ஏரி பொதுப்பணி துறைக்கு சொந்தமானதாகும் மதகு உடைப்பு சீரமைக்க வேண்டும். மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசயிகள் வலியறுத்தி உள்ளனர். 

Tags:    

Similar News