செய்திகள்
கோப்பு படம்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்த சத்துணவு ஊழியர்கள் கைது

Published On 2019-11-26 11:13 GMT   |   Update On 2019-11-26 11:13 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் செய்த சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடைபெற்றது.

அதன்படி இன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாரதாமணி, முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.

அப்போது 36 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு உணவு வழங்கும் உன்னத திட்டத்தை புதிய கல்வி கொள்கையால் அரசு முடக்க முயற்சிக்கிறது. காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். சமையலர், உதவியாளர்களுக்கு நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

உணவு சமைக்க எரிவாயு அரசே வழங்க வேண்டும். காலமுறை ஊதிய வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். பின்னர் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சாலைமறியலை கைவிடுமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடமறுத்து விட்டனர். இதனையடுத்து 167 பெண்கள் உள்பட 178 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News