செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2019-11-23 06:28 GMT   |   Update On 2019-11-23 06:28 GMT
முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர்:

அமைச்சர் செங்கோட்டையன் கொளத்தூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முறையாக பட்டய கணக்காளர் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 21 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் 10 லட்சம் பட்டய கணக்காளர்கள் தேவை. ஆனால் 2 லட்சத்து 85 ஆயிரம் பட்டய கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.


தமிழக முதல்வரின் நடவடிக்கையால் தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது. ஏரி, குளம் தூர்வாரப்பட்டதாலும், குடிமராமத்து பணிகளினாலும் தமிழகம் முழுவதும் தண்ணீர் நிரம்பி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News