செய்திகள்
கோப்பு படம்

சிறுநீரக பாதிப்பு - வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழப்பு

Published On 2019-11-21 10:44 GMT   |   Update On 2019-11-21 10:44 GMT
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 வயதுடைய வெள்ளைப்புலி சிறுநீரக பாதிப்பு காரணமாக இறந்துள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி மற்றும் அரியவகை உயிரினங்கள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு 4 வயது உடைய ‘பீமா’ எனும் வெள்ளைப்புலி உள்பட 12 வெள்ளைப்புலிகள் இருந்தன. கடந்த மாதம் ‘பீமா’ வெள்ளைப்புலிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

கடந்த 25 நாட்களாக மருத்துவ குழுவினர் அந்த புலிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முன்தினம் வெள்ளைப்புலி பரிதாபமாக இறந்தது.

சிறுநீரக பாதிப்பு காரணமாக அந்த புலி இறந்து விட்டதாக வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து பூங்காவில் வெள்ளைப்புலிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

கடந்த 25-10-19 அன்று 1 வயது சிங்கக்குட்டி ஒன்று நுரையீரல் கோளாறு காரணமாக திடீரென இறந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

‘பீமா’ என்ற வெள்ளைப்புலி சிறுநீரக பாதிப்பு காரணமாக இறந்து உள்ளது. இதுபோன்று புலி இறப்பது இதுவே முதல் முறை. எனவே அந்த வெள்ளைப்புலியின் முக்கிய உறுப்புகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

பூங்காவில் உள்ள மற்ற விலங்குகள் ஆரோக்கியமாக உள்ளன. எந்த பாதிப்பும் இல்லை’ என்றார்.
Tags:    

Similar News