செய்திகள்
பிளாஸ்டிக் பைகள்

செங்குன்றத்தில் 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Published On 2019-11-12 07:58 GMT   |   Update On 2019-11-12 07:58 GMT
செங்குன்றத்தில் சுமார் 200 கிலோ மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பேக்கரி, மளிகை கடை, பேன்சி ஸ்டோர் ஆகிய உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
செங்குன்றம்:

செங்குன்றத்தில் நார வாரிக்குப்பம் பேரூராட்சி சார்பில் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கோ. சதீஷ் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். செங்குன்றம் பஜார் முதல் திருவள்ளூர் கூட்டு சாலை வரை 200-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடைபெற்றது. இதில் சுமார் 200 கிலோ மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேக்கரி, மளிகை கடை, பேன்சி ஸ்டோர் ஆகிய உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது சுகாதார அலுவலர் மதியழகன் சுகாதார மேற்பார்வையாளர் ஜலபதி உடனிருந்தனர்.

Tags:    

Similar News