செய்திகள்
கோப்பு படம்

கடன் பிரச்சினை - மனைவியுடன் தகராறில் அரசு ஊழியர் தற்கொலை

Published On 2019-11-07 11:12 GMT   |   Update On 2019-11-07 11:12 GMT
புதுவை அருகே கடன் பிரச்சினையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை கருவடிகுப்பம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ஜீவா (வயது 40). பொதுப்பணித்துறை ஊழியர். இவரது மனைவி சங்கீதா (33).

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சங்கீதா மகளிர் குழு மூலமாக கடனாக ரூ.3 லட்சம் ஜீவாவுக்கு தெரியாமல் வாங்கினார்.

கடனை திருப்பி கொடுக்காததால் கடன் கொடுத்தவர்கள் சங்கீதாவிடம் திருப்பி கேட்டனர்.

இந்த வி‌ஷயம் ஜீவாவுக்கு தெரிய வந்தது. எனக்கு தெரியாமல் எதற்கு கடன் வாங்கினாய்? என கூறி ஜீவா தனது மனைவி சங்கீதாவிடம் கூறி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த ஜீவா நேற்றும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் கோபித்துக் கொண்டு அறையின் உள்ளே சென்ற ஜீவா வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

பின்னர் உள்ளே விளையாடிக்கொண்டு இருந்த அவரது மூத்த மகன் சத்தம் போட்டான். உடனே சங்கீதா கதவை தட்டி பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

பின்னர் ஜீவாவின் தம்பி கோபு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின் விசிறியில் ஜீவா தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார்.

பின்னர் அவரை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து சங்கீதா லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி, ஏட்டு கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News